பிரிட்டன் ஆனது 1,00,000 முன்னாள் ராணுவ வீரர்களை போருக்குத் தயாராக இருக்க அறிவுறுத்தல்!

Muniyandi VS
0

பிரிட்டன் ஆனது 1,00,000 முன்னாள் ராணுவ வீரர்களை போருக்குத் தயாராக இருக்க அறிவுறுத்தல்!

Britain instructs 100,000 ex-servicemen to be ready for war!



ரஷ்யா மற்றும்  உக்ரைன் இடையே நடக்கும்  போர் தற்போது ஐரோப்பாவில் அதிகமாகி  வருகின்ற  பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பிரிட்டன் ஆனது தனது சுமார் 1,00,000 முன்னாள் ராணுவ வீரர்களை (Strategic Reservists) மீண்டும் தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கடந்த நவம்பர் 26  அன்று வெளியான அறிவிப்பின் அடிப்படையில், பிரிட்டன் உடைய  பாதுகாப்பு துறை (UK Ministry of Defence) முன்னாள் இராணுவ வீரர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.


பனிப்போர் நடைப் பெற்ற காலகட்டத்திற்கு (Cold War) பிறகு தற்போது தான்  இத்தகைய பெரிய அளவிலான  நடவடிக்கையை பிரிட்டன்  மேற்கொண்டுள்ளது என்று  The Telegraph தெரிவித்து இருக்கிறது.


பிரிட்டிஷ் உடைய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த கடிதத்தில் பிரிட்டனுடைய ராணுவம், மற்றும்  கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த  தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.


அதேபோல் இந்தக் கடிதத்தில், முன்னாள் இராணுவ வீரர்கள், தற்போது வசிக்கும்  முகவரி, Contact Number , மற்றும் வேலை மற்றும் தொழில்நுட்பத் திறன்களைப் அப்டேட் செய்யுமாறும் அந்த கடித்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதுமட்டுமின்றி விருப்பம் உள்ள முன்னாள் இராணுவ வீரர்கள் தற்போதையை காலகட்டத்தில் நடக்கும் பயிற்சி மற்றும் போர் ஒத்திகை போன்றவற்றில் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப் பட்டுள்ளது.



அதுமட்டுமின்றி, பிரிட்டனுடைய  Royal Air Force ஆனது முக்கியமான திட்டங்களை செயல்படுத்த உள்ளது, போர் விமானங்களை பாதுக்காக்க ராணுவ விமானங்களை Hangar-களுக்குள் பாதுகாப்பாக நிறுத்த, மற்றும் விமானப்படைத் தளங்களில் எதிரிகளின்  Drone தாக்குதல்களைத் தடுப்பதற்காக  Anti-Drone Net போன்ற  அமைப்புகளை உருவாக்கவும் தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


அதேசமயம், உக்ரைன் நாட்டிற்கு  ஆயுதங்களை  வழங்கி வரும் பிரிட்டிஷ் நிறுவனங்களின்  மீது ரஷ்யா ஆனது எப்போது வேண்டுமானாலும் Sabotage எனப்படும் ரகசியத்  தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று MI5 மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.


இதுகுறித்து பேசிய பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் Wes Streeting, நாடு மிக மோசமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும், தற்போதைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு முன்னாள் ராணுவ வீரர்களைத் தொடர்புகொள்வது அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும், பிரிட்டன் தனது நீர்மூழ்கிக் கப்பல் படையின் (Submarine Fleet) பராமரிப்பு மற்றும் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக சுமார் 8 பில்லியன் பவுண்டு முதலீட்டையும் அறிவித்துள்ளது.


முக்கியமாக, இந்த நடவடிக்கை பிரிட்டன் உடனடியாகப் போருக்குச் செல்லப்போகிறது என்பதைக் குறிக்கவில்லை. மாறாக, ரஷ்யா – உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பிரிட்டன் தனது ராணுவத் தயார்நிலையை வலுப்படுத்தி வருகிறது.


Sponsor: Nivastores








Post a Comment

0Comments

Post a Comment (0)