சிறுநீரக கற்களைத் தவிர்க்க 5 எளிய வழிகள்.
![]() |
5 Simple Ways to Avoid Kidney Stones in Tamil |
5 Simple Ways to Avoid Kidney Stones in Tamil
நமது உலகில் சிறுநீரக கற்கள் போன்றவற்றால் பல நபர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.
calcium ( கால்சியம்), மற்றும் (oxalate ) ஆக்சலேட் ( அ) ( uric acid ) யூரிக் அமிலம் போன்றவற்றில் சில பொருட்கள் ஆனது சிறுநீரில் அதிகப்படியான அளவில் குவிந்து crystals அதாவது படிகங்களை உருவாக்குகிறது. இந்த கடினமான Substances ஆனது நமது ( kidneys ) சிறுநீரகங்களில் உருவாகின்றன.
இதுப்போன்று உருவாகும் சிறுநீரகக் கற்கள் தொடர்ந்து மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஆனால் தற்போது இதுப்போன்ற பிரச்சனைகள் மீண்டும் வராமல் இருப்பதற்கு சில ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளன, அவற்றை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.
The New England Journal of Medicine இல் Publish செய்ப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையில் இது குறித்து தெரிவித்துள்ளனர்,
இவற்றில் நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரியமான விஷயம் ஒன்றை நீரை அதிகமாக எடுத்துக் கொள்வதை பற்றி தெரிந்து கொண்ட பிறகு தெரிந்து கொள்ளலாம்.
Intermittent Fasting ஆல் முடி வளர்ச்சியானது மெதுவாகும் - ஆய்வு
1. நீரை அதிகமாக எடுத்துக் கொள்வது :
ஆராய்ச்சியாளர்கள் செய்த சோதனையில் , நீரை அதிகமாக எடுத்துக் கொண்டவர்களுக்கு சிறுநீரக கற்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு, நீரை சரியாக எடுத்துக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது,
எப்போதும் Hydrated ஆக இருந்தால் அது கற்களை Dilute செய்து கற்கள் உருவாவதை தடுக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
8 முதல் 12 கப் வரையில் தினமும் நீரை பருக வேண்டும் என்றும், இதுவே வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதியில் இதைக் காட்டிலும் அதிகமாக, குறிப்பாக காலநிலையைப் பொறுத்து நீரை எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அவ்வப்போது, வெறும் நீரை மற்றும் எடுத்துக் கொள்ளாமல், சிறிது எலுமிச்சை கலந்து பானமாக எடுத்துக் கொண்டால் , அவற்றில் உள்ள citrate ஆனது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அதேசமயத்தில், வெறும் நீரை மற்றும் எடுத்துக் கொண்டால் மட்டும் போதும் என்பதை கடந்து எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகளின் மூலமாகவும் இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும், அவற்றை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.
2. கால்சியம் :
பெரும்பாலான நபர்கள் Calcium அடங்கிய உணவுகளை எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்று கருதுகின்றனர், ஆனால் தற்போதைய ஆராய்ச்சி முடிவு எதிராக உள்ளது.
உண்மை என்னவென்றால், உணவில் இருந்து கிடைக்கும் கால்சியம் உண்மையில் நமது செரிமான அமைப்பில் ஆக்சலேட்டுடன் பிணைக்கப்பட்டு சிறுநீரகங்களில் கற்களை உருவாக்குவதைத் தடுக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.
பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களில் கால்சியம் நிறைந்து காணப்படுகின்றன, அவற்றை நாம் மிதமாக எடுத்துக் கொண்டால் நல்லது என்று கூறப்படுகிறது.
ஆனால் calcium supplements ஐ எடுத்துக் கொண்டால் ஆபத்து என்பதையும் ஆராய்ச்சி முடிவில் கூறப்படுகிறது, அப்படி எடுத்துக் கொள்ள நினைக்கிறீர்கள் என்றால் மருத்துவரை அணுகவும்.
3. ஆக்சலேட் :
மற்றொரு உணவுக் காரணி என்பது அதிக ஆக்சலேட் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதை குறைப்பது ஆகும்.
பசலைக்கீரை, beets, சாக்லேட் மற்றும் nuts போன்றவற்றில் அதிகப்படியான அளவில் ஆக்சலேட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன,
அவை கால்சியத்துடன் இணைந்து கற்களை உருவாக்கும் தன்மை உடையதாக உள்ளது.
ஆனால் நாம் இதுப்போன்ற உணவுகளை முற்றிலுமாக எடுத்துக் கொள்வதை குறைக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் , இதுப்போன்ற உணவுகளை நாம் சிறிய அளவில் எடுத்து கொள்வது மற்றும் கால்சியம் நிறைந்த காணப்படுகின்ற உணவுகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் ஆபத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Learn more.
4. உப்பு :
அதிக சோடியம் அடங்கிய உணவுப் பொருட்களை நாம் எடுத்துக் கொண்டால் சிறுநீரில் அதிக கால்சியம் வெளியேற்றப்படுவதற்கு வழிவகுக்கும், மற்றும் கல் உருவாவதற்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் தன்மை உடையதாக கூறப்படுகிறது.
உப்பு நிறைந்த தின்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உணவில் உப்பு குறைவாக சேர்த்து கொள்வது இந்த சிறுநீரக கற்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு பெரிதும் உதவும்.
ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராம் சோடியம் மற்றும் குறைவாகவோ அல்லது சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் அதைவிடக் குறைவாகவோ எடுத்துக்கொள்வது நல்லது.
5. உடற்பயிற்சி :
ஆரோக்கியமான எடையை தொடர் சரியாக பராமரிப்பது மட்டுமின்றி சுறுசுறுப்பாக இருப்பது போன்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் பெரிதும் உதவும்.
உடல் பருமன் சிறுநீரக கற்களின் அதிக வாய்ப்புடன் பிணைக்கபட்டுள்ளது, குறிப்பாக சிறிய எடை இழப்பு கூட ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் தன்மை உடையதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியான வழக்கமான உடற்பயிற்சி ஒட்டுமொத்த சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் சிறுநீரில் உள்ள பொருட்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.