Intermittent Fasting ஆல் முடி வளர்ச்சியானது மெதுவாகும் - ஆய்வு
![]() |
Intermittent Fasting Slows Hair Growth - Study |
ஒரு புதிய ஆய்வில் இடைப்பட்ட விரதம் (IF) எலிகளில் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது,
இருந்த போதிலும், முடி வளர்ச்சியைக் குறைக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அதேசமயத்தில், சிறிய அளவில் மனித சோதனையிலும் இதேபோன்ற விளைவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
Cell Press journal இல் இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
இதற்காக, Mice ஐ time-restricted feeding (TRF) schedule க்கு உட்படுத்தி உள்ளனர்,
அதாவது, 8 மணிநேரம் எலிக்கு உணவுகள் கிடைக்குமாறும், மீதம் 16 மணிநேரம் உணவு கிடைக்காமல் அதாவது விரதம் இருப்பது போன்று ஆய்வு நடத்தப்பட்டது.
அதேபோல், 49 மனிதர்களிடம் இந்த சோதனை ஆனது நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், Fasting மற்றும் Intermittent Fasting பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.
Fasting ( விரதம் ) என்றால் என்ன? :
Fasting என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவு மற்றும் நீர் ஆதாரங்களை தவிர்ப்பதை குறிப்பது ஆகும்.
அதுமட்டுமின்றி, கலோரி உட் கொள்வதைக் கட்டுபடுத்தவது (அ) சில வகையான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதை விரதம் ( Fasting ) என்று அழைக்கிறோம்.
Also read this.
Intermittent Fasting ( இடைப்பட்ட விரதம் ) என்றால் என்ன? :
இடைப்பட்ட விரதம் (IF) என்பது நாம் உண்ணும் முறையில் மற்றும் நாம் உண்ணும் கால இடைவெளியில் நாம் மாறி மாறி உண்ணும் முறையை குறிப்பது ஆகும்.
இவற்றில் பல்வேறு முறைகள் உள்ளன,
உதாரணமாக, 16 மணி நேரம் உண்ணாமல் விரதம் இருந்து , 8 மணி நேர கால அளவில் உண்பது போன்றவை ஆகும்.
Learn more.