அகச்சிவப்பு கண்டறிதலில் ( Infrared Detection ) முக்கிய திருப்புமுனை

Muniyandi VS
0

அகச்சிவப்பு கண்டறிதலில் ( Infrared Detection ) முக்கிய திருப்புமுனை :

Major breakthrough in infrared detection


 மத்திய புளோரிடா பல்கலைக்கழக ( University of Central Florida ) ஆராய்ச்சியாளர்கள்  அகச்சிவப்பு கண்டறிதல் infrared detection இல்  ஒரு அற்புதமான புதிய கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ளனர்.


வெவ்வேறு அலைநீளங்கள் அல்லது 'வண்ணங்களின்'  ( wavelengths or 'colors.' ) நீண்ட அலை அகச்சிவப்பு (LWIR) ஃபோட்டான்களைக் - long wave infrared (LWIR) photons ஐ கண்டறிய ஆராய்ச்சியாளர் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.


அறிவியல் செய்திகள் - 13.12.2024


என்ன  விஷயம்? :


 தற்போதைய அகச்சிவப்பு டிடெக்டர்களுக்கு மிகக் குறைந்த வெப்பநிலை தேவைப்படுகிறது.


 மேலும்  இவை  விலை உயர்ந்ததாக மற்றும்  பல பயன்பாடுகளுக்கும் நடைமுறைக்கு மாறாக  உள்ளது. இதனால் பல சிக்கலான விடயங்களை சந்திக்க நேரிடுகிறது.


ஆனால் தற்போது கண்டுபிடிக்க பட்ட புதிய நுட்பமானது அறை வெப்பநிலையில் அகச்சிவப்பு ஒளியைக் கண்டறியும் சிறப்பு வகை கிராபெனைப் ( special type of graphene ) பயன்படுத்துகிறது.


எப்படி வேலை செய்கிறது?


 அகச்சிவப்பு ஒளி அதைத் தாக்கும் போது வெப்பநிலை வேறுபாட்டை உருவாக்கும் வகையில் கிராபென் ( graphene  ) வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த வெப்பநிலை வேறுபாடு அளவிடக்கூடிய மின் சமிக்ஞையை ( electric signal ) உருவாக்குகிறது.


பயன்கள் :


 1. மருத்துவ இமேஜிங் ( Medical imaging ):


 மேம்படுத்தப்பட்ட அகச்சிவப்பு கண்டறிதல் ஆனது சிறந்த மருத்துவ இமேஜிங் நுட்பங்களுக்கு வழிவகுக்கும் தன்மையை கொண்டதாக இருக்கும்.


 2. நுகர்வோர் மின்னணுவியல் ( Consumer electronics ) :


இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்கள், கேமராக்கள் மற்றும் பிற நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.


 3. விண்வெளி ஆய்வு ( Space exploration ):


மேம்படுத்தப்பட்ட அகச்சிவப்பு கண்டறிதல் ( infrared detection ) விஞ்ஞானிகளுக்கு பிரபஞ்சத்தை விரிவாக ஆய்வு செய்ய உதவும்.


 4. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ( Security and surveillance )  :


இந்த தொழில்நுட்பம் ஆனது பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் பிற கண்காணிப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படலாம்.


 5. ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இமேஜிங் ( Spectroscopic imaging ) :


பொருட்களை அவற்றின் நிறமாலை பண்புகளால் பகுப்பாய்வு செய்தலில் பயன்படலாம்.


 6. தெர்மல் இமேஜிங் பயன்பாடுகள் ( Thermal imaging applications ) :


 பொருள்கள் அல்லது சூழல்களில் வெப்பநிலை வேறுபாடுகளைக் கண்டறிதலில் பயன்படலாம்.


Science News in Tamil - 13.12.2024


Also read this.


 முடிவுரை :


 மத்திய புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரின் புதுமையான நுட்பம் பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்டது, புதிய பயன்பாடுகள் மற்றும் கண்டுபிடிப்புகளை செயல்படுத்துகிறது.


Source.

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)