மறு பிறப்பின் மாயம் – மெக்ஸிகன் ஆக்ஸலாட்ல் (Mexican Axolotl)---
🦎 மெக்ஸிகன் ஆக்ஸலாட்ல் – மறுவளர்ச்சி (Regeneration) திறனுடைய அற்புதம்!
மெக்ஸிகன் ஆக்ஸலாட்ல் (Mexican Axolotl) என்பது ஒரு நீர்நில வாழ் உயிரினம் ஆகும்.
இவற்றால் தனது முழு கரங்கள் , முதுகுநரம்பு மற்றும் இதய திசுக்களையும் மட்டுமின்றி சில நேரங்களில் மூளையின் ஒரு பகுதியைக் கூட இவற்றால் மீண்டும் வளர்த்துக்கொள்ள முடியும்.
இந்த விசித்திர திறன் இருப்பதன் காரணமாகவே, தற்போது உலகம் முழுவதும் மறுவளர்ச்சி மருத்துவ ஆராய்ச்சிக்காக முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது.
![]() |
Mexican axolotl in Tamil |
---
இந்த ஆக்ஸலாட்ல் என்பது ஒரு வகை சலமாண்டர் (Salamander) ஆகும்.
இது தான் பிறக்கின்ற பொழுது பெற்ற சில உறுப்புகள் அல்லது பாகங்களை ( சிறிய கால்கள், நீர்நாணிகள்) தான் வளர்ந்த பிறகும் கூட இழக்காது. இவற்றை நியோட்டெனிஸ் (Neoteny) என்று அழைக்கிறோம்.
இந்த மெக்ஸிகன் ஆக்ஸலாட்ல் (Mexican Axolotl) உடலில் உள்ள ஸ்டெம் செல்கள் (Stem Cells) தான் இந்த மறுவளர்ச்சி திறனுக்கு அடிப்படையாக உள்ளது.
இந்த மெக்ஸிகன் ஆக்ஸலாட்ல் (Mexican Axolotl) ஆனது பாதிக்கப்படும் போது பாதிக்கப்பட்ட உறுப்புகளை மீண்டும் கட்டமைக்க திசு திருத்தம் (tissue regeneration) செய்கிறது.
My Quora Profile.
---
இந்த அதிசய அறிவியல் நிகழ்வானது இதய, மூளை, மற்றும் முதுகுநரம்பு போன்ற நுண்ணிய உறுப்புகளை மீண்டும் வளர்க்கும் திறன் போன்றவையால் , இது மனிதர்களுக்கான மருத்துவ தீர்வுகளை உருவாக்க உதவி புரியும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, நோய் மற்றும் விபத்தால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கான உடல் உறுப்புகள், மறுவளர்ச்சி, நரம்பியல் சிகிச்சை, மற்றும் மூளை பயோலஜி போன்ற துறைகளில் இது மிக முக்கிய பயனுள்ளதாக மாறியுள்ளது.
---
📌
மெக்ஸிகன் ஆக்ஸலாட்ல் என்ற இந்த உயிரினம் மனிதர்களுக்கு எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கக்கூடிய சக்தி வாய்ந்த உயிரினமாக மாறி உள்ளது!
---
📢
🦎 மறு பிறப்பின் மாயம் – மெக்ஸிகன் ஆக்ஸலாட்ல் (Mexican Axolotl)
முழு கரங்களும், இதயமும், மூளையும் மீண்டும் வளர்த்துக்கொள்ளும் தன்மை கொண்ட இந்த உயிரினம், நாளைய மருத்துவ உலகின் நம்பிக்கை நட்சத்திரம்!
#அற்புதஉயிரினம் #மருத்துவஆய்வு #Axolotl #விஞ்ஞானஅற்புதம் #Regeneration
---