பிரேசில் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணையை நிராகரித்தது

Muniyandi VS
0

பிரேசில் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணையை நிராகரித்தது ( Brazil rejects India's Akash missile )

Brazil rejects India's Akash missile tamil Defence News


பிரேசில் நாடு ஆனது ஆகாஷ்  ஏவுகணை அமைப்பை வாங்கக் கூடிய பேச்சுவார்த்தையில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆகாஷை கைவிட்டுவிட்டு ஐரோப்பியாவை  அதற்கு மாற்றாக நாடியுள்ளது.


முக்கிய அம்சங்கள் :


பிரேசில் நாடு  இந்திய நாட்டின் தயாரிப்பான  ஆகாஷ் ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான  பேச்சுவார்த்தைகளை தற்போது  நிறுத்திவிட்டதாகவும்,


அதற்கு மாற்றாக 

ஐரோப்பிய  MBDA-வின் EMADS அமைப்பை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதற்கு முக்கிய காரணமாக  அதன் அதிக தூரம் மட்டுமின்றி அவற்றின்  நிரூபிக்கப்பட்ட செயல்திறன் போன்றவை ஆகும் என்று கூறப்படுகிறது.


 இவற்றில் குறிப்பாக இந்திய நாட்டின்  DRDO ஆல் உருவாக்கப்படுகின்ற இந்த ஆகாஷ் ஏவுகணை அமைப்பானது 25-30 கி.மீ range  உடையதாக உள்ளது,


ஆனால்  EMADS ஆனது 40 கி.மீட்டருக்கும் அதிகமான range உடையதாக உள்ளது,


இதுப்போன்ற விடயங்கள்  பிரேசில் நாட்டின்  முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


இருந்தபோதிலும், இந்தியா மற்றும் பிரேசில் நாட்டிற்கு இடையே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்து  ஒப்புக்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது,


இது தொடர்ச்சியான diplomatic efforts ஐ  காட்டுகிறது.


ஒப்பந்தம் குறித்த விவரங்கள் : 


பிரேசில் ஆனது MBDA-வின் மேம்படுத்தப்பட்ட MBDA's Enhanced Modular Air Defence Solutions (EMADS) 

 அமைப்பை வாங்குவதற்கான  முடிவை எடுத்துள்ளது என்று மேலை பார்த்தோம், இந்த ஒப்பந்தத்தின் USD 920 million டாலர்கள் ஆகும்.


The EMADS system ஆனது CAMM-ER missile ஐ உள்ளடக்கியது, மற்றும் 40 km Range உடையதாகவும், அனைத்து வானிலையிலும் சிறப்பாக செயல்படும் தன்மை உடையதாக உள்ளது.


இந்தியாவின் ஆகாஷ் அமைப்பைக் காட்டிலும் இந்த EMADS அமைப்பானது பிரேசில் நாட்டின் பாதுகாப்புத் தேவைக்கு சிறப்பானதாக உள்ளதாக கருதப்படுகிறது.


இந்தியா-பிரேசில் உறவுகளுக்கான தாக்கங்கள் :


பிரேசில் நாட்டின் உடைய இந்த முடிவானது

இந்தியாவுக்கான பாதுகாப்பு ஏற்றுமதியில் ஒரு பின்னடை ஏற்படுத்தி  இருந்தாலும்,


இந்தியா மற்றும் பிரேசிலின் பாதுகாப்பு உறவுகளை தங்களுக்கிடையே மேம்படுத்த  தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டு ஆராய்ச்சியில் மற்றும் இணைந்து மேம்படுத்துவது போன்றவற்றில்  கவனம் செலுத்துகின்றனர், இதன்மூலமாக தங்களிடையே பரந்த மூலோபாய கூட்டாண்மையைக் வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர்.



ஆய்வு குறிப்பு:


இந்தியாவின் Development Organisation (DRDO)  ஆல் உருவாக்கப்பட்டு, Bharat Dynamics Limited (BDL) and Bharat Electronics Limited (BEL)  ஆல் தயாரிக்கப்படும்


இந்த  ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, Medium-range surface-to-air missile (SAM) ஆகும். அதாவது நிலத்தில் இருந்து வானை நோக்கி பயணிக்கும் ஏவுகணை.


Aircraft, Helicopters, மற்றும்  drones ஐ வீழ்த்த அதாவது இடைமறிக்க ( intercept ) பயன்படுகிறது.


இது 25-30 கி.மீ Range உடையது மற்றும் 100 மீட்டர் முதல் 20 கி.மீ உயரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் தன்மை உடையது


எந்த வகையான கரடு முரடான நிலப்பரப்பாக இருந்தாலும் எளிதில் நகர்த்த மற்றும் எதிரிகள் electronic மின்னணு முறையில் அமைப்பை குழப்ப மற்றும் தாக்க முயற்சி செய்தாலும் அவற்றை முறியடித்து வெற்றிகரமாக செயல்படக் கூடியது.


அதேபோல் ஆகாஷ் ஏவுகணை அமைப்பானது  ஆபரேஷன் சிந்துர் ( Operation Sindoor )  போது பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை 100% துல்லியத்துடன் Neutralized  செய்தது.


இந்த விடயம் ஆனது பிரேசிலின் ஆர்வத்தை மிகவும் ஈர்த்தது, அவற்றிலும் குறிப்பாக ஜூலை 2025 இன் ஆரம்பத்தில் நடைபெற்ற 17th BRICS Summit இல் கலந்து கொள்ள இந்திய  பிரதமர் நரேந்திர மோடியின் பிரேசில் பயணத்தின் போது இது highlighted ஆக இருந்தது.


Also Read This.

இருந்த போதிலும், டெக்கான் ஹெரால்ட் மற்றும் இந்தியா டுடே போன்ற பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி , பிரேசிலின் சமீபத்திய EMADS நோக்கிய மாற்றம், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை காட்டுவதாக அறியப்படுகிறது.


MBDA ஆல் உருவாக்கப்பட்ட EMADS அமைப்பானது  Common Anti-Air Modular Missile – Extended Range (CAMM-ER) உள்ளடக்கியது ஆகும்.


இது 40 கி.மீட்டருக்கும் அதிகமான Range உடையதாக உள்ளது.


4.2 மீட்டர் நீளம் மற்றும் 160 கிலோ எடை உடையதாக உள்ளது, மற்றும் Active radio frequency seeker உடன் supersonic speed இல் பயணிக்கிறது.


இது அனைத்து வானிலையிலும் சிறப்பாக  இருக்கும் என்று கூறப்படுகிறது.


Indian Defence Research Wing இன் கூற்றுப்படி இந்தியா பிரேசில் நாட்டிற்கு Older version ஐ வழங்க திட்டமிட்டு இருக்கலாம், மற்றும் இஸ்ரேலிய  நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய Varient   இல்லாத ஆகாஷ் அமைப்பின் பழைய பதிப்பை இந்தியா வழங்கியிருக்கலாம் என்று கூறுகின்றனர்,


இது பிரேசில் நாட்டின்  அதிருப்திக்கு பங்களித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


EMADS அமைப்பின் நன்மைகள் அதன் modular and scalable design ஆனது மற்ற  சென்சார்கள் மற்றும் effectors உடன்  ஒருங்கிணைப்பை எளிதாக்குகிறது,


 மற்றும் பிரேசில் நாட்டின் naval frigates இல்  திட்டமிடப்பட்ட பயன்பாடு, தளவாடங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சியை எளிதாக்குவது போன்றவை  அடங்கும்.


இதற்கு Contrast ஆக ஆகாஷ் அமைப்பானது  5.87 மீட்டர் நீளம், 350 மிமீ விட்டம், மற்றும் 710 கிலோ எடை கொண்டதாக உள்ளது,


ஒரு கமாண்ட் வழிகாட்டுதல் அமைப்பைப் பயன்படுத்துகின்றன, இவை பிரேசில் நாட்டிற்க்கு பயனுள்ளதாக இருந்தாலும்,


பிரேசில் நாட்டின் தற்போதைய தொழில்நுட்ப எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.


 இந்தியாவின் வளர்ச்சி :


இந்த பிரேசில் நாட்டின் முடிவு இந்தியாவிற்கு பின்னடைவாக இருந்தாலும், இந்த ஆகாஷ் அமைப்பை ஆர்மீனியா வாங்கி உள்ளது, பிலிப்பைன்ஸ் நாட்டிற்கிடையே இந்தியா ஒப்பந்தம் செய்ய உள்ளது.


இருந்தாலும் இந்த துருக்கி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிரியாக இந்தியாவிற்கு அவப்பெயரை போலியாக பரப்பும் பணிகளில் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றனர், துருக்கியின் website's jibe (The Week ) ஆனது குறிப்படத்தக்கது.



Sources :


The Economic Times

Deccan Herald

India Today

Indian Defence News

The Defense Post

Post a Comment

0Comments

Post a Comment (0)