Neanderthals traveled 3000 km from Europe to Asia
கிரிமியாவில் கண்டெடுக்கப்பட்ட எலும்பை ஆய்வு செய்து ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான விடயத்தை கண்டுபிடித்து உள்ளனர்.
![]()  | 
| Image of ( Neanderthals traveled 3000 km from Europe to Asia ) | 
யாதெனில், நியாண்டர்தால் மனிதர்கள் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து ஆசியாவிற்கு அதாவது கண்டம் விட்டு கண்டம் பயணித்து இருக்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளனர்,
DNA சான்றுகள் இவற்றை உறுதிபடுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட 3000 km வரை பயணித்து இருக்கிறார்கள்,
கிரிமியா வின் Starosele rock-shelter இல் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்பில் mitochondrial DNA வை பிரித்தெடுத்து ஆய்வு செய்ததன் மூலம் ஆசியப் பகுதியில் உள்ள ரஷ்ய சைபீரியாவின் ( Altai region ) மூன்று பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புதைவடிவங்களுடன் ஒத்துப் போகிறது என்பதை உறுதி செய்து உள்ளனர்.
அதுமட்டுமின்றி, அவர்கள் பயன்படுத்திய Stone Tool மற்றும் Stone Tool இன் Style போன்றவையும் ஒத்துப் போகிறது, இதன் மூலம் அவர்கள் 3000 km பயணித்து தங்களது Genetic & கலாச்சாரம் சார்ந்த எச்சங்களை விட்டுச் சென்றுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட எலும்பு கிட்டத்தட்ட 45000 வருட பழமையான ஒன்றாகும்.
மேலும், University of Vienna வைச் சேர்ந்த Pigott கூறுகையில் Homo sapiens (early humans) மற்றும் Denisovans (another ancient human group) போன்றவர்களுடன் வெவ்வேறு பகுதிகளில் உள்ள குழுக்களுடன் கலந்து தனது சந்ததிகளை உருவாக்கினர் என்று குறிப்பிடுகிறார்.
மேற்குறிப்பிட்ட எலும்பு மற்றும் கருவி போன்ற ஆதாரங்கள் கிரிமியா மட்டுமின்றி மற்ற ஐரோப்பிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்களுடனும் பொருந்துகிறது,
ஆனால், கிரிமியவால் கண்டுடெடுக்கப்பட்ட எச்சங்கள் தான் ஆசிய சைபீரிய எச்சங்களுடன் அதிகமாக ஒத்துப் போகிறது.
குறிப்பாக Denisovan father மற்றும் நியாண்டர்தால் தாயுடன் கூடிய பெண்ணின் மரபணு ஒத்துப் போகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மறு பிறப்பின் மாயம் – மெக்ஸிகன் ஆக்ஸலாட்ல் (Mexican Axolotl)
