பனிக்கட்டியை உருவாக்கும் பூஞ்சை: Fungus that forms ice

Muniyandi VS
0

பனிக்கட்டியை உருவாக்கும் பூஞ்சை: Fungus that forms ice:


அனைவருக்கும் வணக்கம், 

பனிக்கட்டியை உருவாக்கும் பூஞ்சை: Fungus that forms ice:

Read this in English ( Free )

மண்ணில் உள்ள  ஒரு வகையான பூஞ்சை ஆனது  தண்ணீரை பணிக்கட்டியாக  மாற்றுகிறது என்ன ஒரு சுவாரசியமான தகவலை விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க.


அதைப் பற்றி  நம்ம இப்ப இந்த பதிவில்  தெரிஞ்சுக்க போறோம்.


சூப்பர் கூலிங் (Supercooling) :


முக்கியமான விடயம் என்ன அப்படின்னா சூப்பர் கூலிங் ( Supercooling )  அப்படிங்கிற ஒரு விஷயம்.


அதாவது நம்ம பாக்கக்கூடிய இந்த தண்ணீர் அப்படிங்கறது 0°செ அப்படிங்கிற அந்த வெப்பநிலையில பணிக்கட்டியாகும் அப்படின்னுதான் நம்ம நிறைய பேரு படிச்சிட்டு இருப்போம்.


அப்படிதான் நம்ம பரவலா நினைச்சுட்டு இருப்போம்.


ஆனா உண்மையில என்ன அப்படின்னா ஒரு தூய்மையான தண்ணீர் இருந்துச்சுன்னா அந்த தண்ணீர் -46°செ வரை கூட உறையாமல் திரவமாகவே இருக்கறதுக்கு வாய்ப்புகள் இருக்கு அப்படின்னு சொல்றாங்க.


சோ, இவற்றைத் தான்  சூப்பர் கூலிங் அப்படின்னு சொல்றாங்க.  அப்படிப்பட்ட அந்த தண்ணீர்  பணிக்கட்டியாக மாறணும்னா அதுக்கு ஒரு தூண்டுகோள் தேவைப்படுது அப்படின்னு சொல்றாங்க.


அதாவது ஒரு Seed . இந்த தூசி அல்லது சில பாக்டீரியாக்கள் தான் இதுக்கு இந்த தூண்டுகோளாக செயல்படும்.


அதாவது இந்த திரவமாக இருக்கக்கூடிய இந்த நீர் பணிக்கட்டியா மாறுவதற்கு ஒரு தூசி போன்ற சில பாக்டீரியாக்கள், தூசி அல்லது சில பாக்டீரியாக்கள் வந்து தேவைப்படும் அப்படின்னு சொல்றாங்க.


இதுலதான் இந்த பூஞ்சையோட ஒரு மிக முக்கியமான பங்கு வந்து இதுல வருது.


பூஞ்சையின் வித்தை :


தற்போது என்ன அப்படின்னா விஞ்ஞானிகள் மோர்டிய ரெல்லா ( Mortierellaceae )  அப்படிங்கிற ஒரு மண் பூஞ்சை யை கண்டுபிடிச்சிருக்காங்க.


இது வந்து தண்ணீரை -2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில பணிக்கட்டியாக மாற்றும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டிருக்கு.


இதில் என்ன சிறப்பு? :


இதுல இருக்கக்கூடிய சிறப்பு என்ன அப்படின்னா இந்த பூஞ்சை ஒரு வகை புரோட்டீன் புரதத்தை வந்து சுரக்குது அப்படின்னு சொல்றாங்க.


இந்த புரதம்தான் தண்ணீர் மூலக்கூறுகளை வரிசைப்படுத்தி சீக்கிரமாக பணிக்கட்டியாக மாற்றுவதற்கு  உதவியா இருக்கு அப்படின்னு சொல்றாங்க.


இதுல என்ன அப்படின்னா பாக்டீரியாக்கள் பணிக்கட்டியை உருவாக்க அதன் முழு செல்லுமே தேவைப்படும்.


ஆனா இந்த பூஞ்சை சுரக்கும் புரதம் மட்டும் இருந்தாலே போதும் பூஞ்சை இல்லாமலே தண்ணீர் வந்து உரையும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு.


இதன் பயன்கள் என்ன? :


இதனால என்ன பயன் அப்படின்னா கிளவுட் சீடிங் அப்படின்னு நம்ம கேள்விப்பட்டிருப்போம்.


செயற்கை  மழை . சோ  மழையை   வர வைப்பதற்காக சில்வர் அயோடைடு போன்ற நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருளை  பயன்படுத்துறாங்க அதற்கு பதிலாக இந்த இயற்கை  பூஞ்சையினால நமக்கு கிடைக்கக்கூடிய அந்த புரதத்தை வந்து நம்ம பயன்படுத்துனோம் அப்படின்னா சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது அப்படிங்கிற ஒரு பயன்,


ரெண்டாவது வந்து பாத்தீங்கன்னா உணவு பாதுகாப்பு, உறைந்த உணவுகளை வந்து தயாரிக்கும் போது ஃப்ரோசன்ஃுட்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா  அந்த மாதிரி உணவுகளை வந்து நம்ம தயாரிக்கும் போது உணவின் தரம் மாறாமல் சீக்கிர  வந்து உறைய வைக்கறதுக்கு இது உதவியா இருக்கும் அப்படின்னு சொல்லப்படுது.


 அடுத்து  மருத்துவத்துறை.

 மனித உறுப்புகளை  பாதுகாப்பாக உறைய வைத்த பிறகு பயன்படுத்துவதற்கு அதாவது அந்த ஆர்கன் பிரசர்வேஷன்ல வந்து இது பயனுள்ளதாக இருக்கும் அப்படின்னு சொல்லப்படுது.


காலநிலை மாற்றம் காற்றில் இந்த பூஞ்சை புரதங்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதை அறிவதன் மூலம் மேகங்கள் உருவாவதையும் மழை பொழிவதையும்  துல்லியமாக கணிக்க முடியும் அப்படின்னு சொல்லப்படுது.


 சுருக்கமா சொல்லணும் அப்படின்னா, மண்ணில் இருக்கும் ஒரு சாதாரண பூஞ்சைதான். எதிர்காலத்தில நாம மழையை  பொழிய வைப்பதற்கு மற்றும் உணவை  பாதுகாப்பதற்கும் காலநிலை மற்றும் மருத்துவத்ததுறை போன்ற பல்வேறு துறைகளை பயன்படும் ஒரு மிக வரப்பிரசாதமாக அமையும் அப்படிங்கறதுல எந்த ஒரு சந்தேகமும் இல்லை.


இன்றைய அறிவியல் செய்திகள் | Science News Tamil

Post a Comment

0Comments

Post a Comment (0)