TNPSC Group 4: தமிழ்ச் சொல் வளம் - எளிமையான விளக்கக்குறிப்புகள்
TNPSC Group 4 தேர்விற்குத் தமிழ் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் இன்றைக்கு படிக்க உள்ள பாடப்பகுதி ஆனது பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருக்கின்ற தமிழ்ச்சொல் வளம் என்ற உரைநடை ஆகும்.
![]() |
| tnpsc group 4 exam preparation notes in tamil |
இவற்றின் ஆசிரியர் தேவநேயப் பாவாணர் ஆவார்.
இந்த பாடப் பகுதி ஆனது தமிழின் சொல் சிறப்பை மற்றும் தாவரங்களின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தமிழ் மொழியில் எந்த அளவிற்கு நுட்பமான பெயர்கள் உள்ளன என்பதை பற்றியது.
தற்போது தேர்வை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான குறிப்புகளைக் கீழே தெரிந்து கொள்வோம்.
1. தாவரத்தின் அடிப்பகுதி (அடி வகை)
ஒரு தாவரத்தின் உடைய அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் ஆகும்.
தாள்: நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி.
தண்டு: கீரை, வாழை முதலியவற்றின் அடி.
கோல்: நெட்டி, மிளகாய்செடி முதலியவற்றின் அடி.
தூறு: குற்றுச்செடி, புதர் முதலியவற்றின் அடி.
தட்டு அல்லது தட்டை: கம்பு, சோளம் முதலியவற்றின் அடி.
கழி: கரும்பின் அடி.
கழை: மூங்கிலின் அடி.
அடி: புளி, வேம்பு முதலியவற்றின் அடி.
2. கிளைப் பிரிவுகள் :
தாவரங்களின் உடைய அடியில் இருந்து பிரிந்து செல்லும் பிரிவுகள் ஆகும்.
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை.
கொம்பு/கொப்பு: கவையின் பிரிவு.
கிளை: கொம்பின் பிரிவு.
சினை: கிளையின் பிரிவு.
போத்து: சினையின் பிரிவு.
குச்சு: போத்தின் பிரிவு.
இணுக்கு: குச்சியின் பிரிவு.
3. இலை வகை :
தாவரங்களின் இலைகளைக் குறிக்கும் சொற்கள் ஆகும்.
இலை: புளி, வேம்பு போன்றவற்றின் இலை.
தாள்: நெல், புல் போன்றவற்றின் இலை.
தோகை: சோளம், கரும்பு ஆகியவற்றின் இலை.
ஓலை: தென்னை, பனை ஆகியவற்றின் இலை.
சண்டு: காய்ந்த தாளும் தோகையும்.
சருகு: காய்ந்த இலை.
4. கொழுந்து வகை (தாவரத்தின் நுனிப்பகுதியை குறிக்கும் சொற்கள் ஆகும். )
துளிர்/தளிர்: நெல், புல் முதலியவற்றின் கொழுந்து.
முறி/கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து.
குருத்து: சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து.
கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி.
5. பூவின் நிலைகள் :
பூவின் ஏழு நிலைகளைத் தமிழ் ஆனது வகைப்படுத்துகிறது.
1. அரும்பு: பூவின் தோற்ற நிலை.
2. போது: பூ விரியத் தொடங்கும் நிலை.
3. மலர் (அலர்): பூவின் மலர்ந்த நிலை.
4. வீ: மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை.
5. செம்மல்: பூ வாடின நிலை.
6. முக்கியத் தகவல்கள் (தேர்வை அடிப்படையாகக் கொண்டு ) :
யார் இவர்? (பக்கம் 5-ல் உள்ள பெட்டிச் செய்திகள் ) :
1. திருச்சி அருகில் அமைந்து இருக்கின்ற அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை'யை அமைத்தவர் இரா. இளங்குமரனார் ஆவார்.
2. பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் ஆவார்.
3. திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் கொண்டவர் ஆவார்.
4. 'செந்தமிழ் அந்தணர்' என்று அழைக்கப்படுபவர் ஆவார்.
தெரியுமா? (பக்கம் 7-ல் உள்ள பெட்டிச் செய்திகள் ) :
1. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா ஆகும்.
1. அந்த மாநாட்டிற்குரிய முதல் மொழி தமிழ் ஆகும். (கூற்று: பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார்).
நூல் வெளி:
தேவநேயப் பாவாணர் மொழிஞாயிறு என்று அழைக்கப்படுகிறார்.
இக்கட்டுரை 'சொல்லாய்வுக் கட்டுரைகள்' என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது ஆகும்.
இவர் 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக' பணியாற்றியவர் ஆவார்.
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
TNPSC Group 4 - படிக்கும் முறை:
1. பொருத்துக: 'அடி வகை' மற்றும் 'இலை வகை'யைப் பெயர்களுடன் பொருத்துவது போன்ற வினாக்கள் அமைய வாய்ப்புள்ளது (உதாரணமாக: தாள் - நெல், ஓலை - பனை).
2. பெயர்ச் சிறப்பு: பூவின் நிலைகளை வரிசைப்படுத்தி எழுதுக போன்றவாறு கேட்கலாம்.
3. ஆசிரியர் குறிப்பு: இளங்குமரனார் மற்றும் பாவாணர் போன்றவர்களின் சிறப்பினை பற்றி நன்கு நினைவில் கொள்ளுங்கள்.
tnpsc group 4 exam preparation notes in tamil
